| |
| |
| |
அவசர கருத்தடை மாத்திரை என்பது என்ன? |
| |
பாதுகாப்பற்ற செக்ஸ் கொண்ட அல்லது கருத்தடை பயனளிக்காத பிறகு திட்டமிடப்படாத கருத்தரிப்பை தடை செய்ய ஒரு பாதுகாப்பான மற்றும் சுலபமான வழி அவசர கருத்தடை மாத்திரையாகும். |
| |
|
|
| |
|
| |
ஐ-பில் என்பது என்ன? |
| |
ஐ-பில் என்பது சிப்ளாவினால் தயாரிக்கப்பட்ட ஓர் அவசர கருத்தடை மாத்திரையாகும். ஐ-பில் மாத்திரையின் ஒரு சிங்கிள் டோஸ் பாதுகாப்பற்ற செக்ஸ் கொண்ட அல்லது கருத்தடை பயனளிக்காத பிறகு உத்தேசித்திராத கருத்தரிப்பை தடுக்க பாதுகாப்பான மற்றும் சுலபமான வழியை அளிக்கிறது. ஐ-பில் ப்ரிஸ்க்ரிப்ஷன் இன்றி அனைத்து கெமிஸ்ட் கடைகளில் கிடைக்கிறது. |
| |
|
|
| |
| |
ஐ-பில் உபயோகிப்பதற்கு பொருத்தமான நேரம் எது? |
| |
நீங்கள் பாதுகாப்பற்ற செக்ஸ் கொண்டிருந்து கருத்தரிப்பை தடுக்க விரும்பினால், எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக 12 மணி நேரத்திற்குள்ளாக நீங்கள் ஐ-பில் எடுத்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பற்ற உடலுறவு கொண்ட 72 மணி நேரத்திற்குள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் பக்கபல கருத்தடை முறையாகக் கூட ஐ-பில் உபயோகமாக இருக்கிறது.
- கருத்தடை பயனிழப்பு
- பாதுகாப்பற்ற செக்ஸ்
- உங்கள் வழக்கமான கருத்தடை முறையின் தவறான உபயோகம்
- பலாத்காரமான செக்ஸ்
|
| |
|
|
| |
| |
ஐ-பில் உபயோகிப்பதற்கான வழிமுறைகள் என்ன? |
| |
ஐ-பில் என்பது வாய்வழி எடுத்துக்கொள்ளக் கூடிய ஒரு சிங்கிள் டோஸ் மாத்திரை. இது உணவுக்குப் பிறகு ஒரு கிளாஸ் நீருடன் விழுங்கப்பட வேண்டும். பாதுகாப்பற்ற செக்ஸ் கொண்ட அல்லது கருத்தடை பயனளிக்காத பிறகு கூடுமான விரைவில் ஐ-பில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் 72 மணி நேரத்திற்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
|
| |
|
|
| |
| |
ஐ-பில் உபயோகிப்பதற்கு எப்போது பொருத்தமானதல்ல? |
| |
நீங்கள் ஏற்கனவே கர்ப்பமுற்றிருந்தால் ஐ-பில் செயல் புரியாது. ஏனெனில் இது ஒரு பக்கபல அல்லது அவசர கருத்தடை முறை மட்டுமே. இது வழக்கமான கருத்தடை முறைகளுக்கு மாற்று அல்ல. பாதுகாப்பு அற்ற செக்ஸ் கொண்ட 72 மணி நேரத்திற்கு பிறகு எடுத்துக் கொண்டால் ஐ-பில் பயனுடையதாய் இருக்காது.
நீங்கள் லிவோநார் ஜெஸ்ட்ரெல்-க்கு ஒவ்வாமை உடையவராய் இருப்பின் ஐ-பில் பரிந்துரை செய்யப்படுவதில்லை. இது ஐ-பில்-ல் உள்ள மருந்தின் பெயராகும். |
| |
|
|
| |
| |
யார் ஐ-பில் மாத்திரையை பயன்படுத்த முடியும்? |
| |
ஒரு கருத்தடையை உபயோகிக்க தவறுதல் அல்லது பயனிழந்து விட்டதன் காரணமாக உத்தேசித்திராத கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்புள்ள குழந்தை பெறும் வயதுடைய எந்த பெண்ணும் ஐ-பில் பயன்படுத்த முடியும். இதனை கற்பழிக்கப்பட்ட அல்லது பலாத்கார செக்ஸ் கொண்ட நிலையில் கூட பயன்படுத்திக் கொள்ள முடியும். |
| |
|
|
| |
| |
நான் ஐ-பில் எடுத்துக் கொள்ளும் முன்பு என்னுடைய மருத்துவரிடம் மருத்துவ செக்-அப் செய்துகொள்ள வேண்டுமா? |
| |
ஐ-பில் எடுத்துக் கொள்ளுவதற்கு மருத்துவ செக்-அப் தேவை இல்லை. எனினும் நீங்கள் ஏதேனும் தீவிர நோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருப்பின் அல்லது விவோநார் ஜெஸ்ட்ரெல்-க்கு அறிந்த ஒவ்வாமை இருப்பின் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.
|
| |
|
|
| |
| |
ஐ-பில் எவ்வாறு செயலாற்றுகிறது? |
| |
நீங்கள் மாதவிடாய் சுற்றில் எந்த நிலையில் இருக்கலாம் என்பதைப் பொருத்து ஐ-பில் மூன்று வேறுபட்ட வழிகளில் செயல் புரிகிறது.
- கருப்பையிலிருந்து முட்டை வெளிப்படுத்தப்படுவதை இது நிறுத்தலாம்.
- முட்டை ஏற்கனவே வெளிப்பட்டு விட்டால் அது கருவுறப்படுவதிலிருந்து விந்துவை தடை செய்யலாம்.
- முட்டை ஏற்கனவே கருவுற்றுவிட்டால் அது கருப்பையை ஒட்டிய சுவருடன் பற்றிக் கொள்ளுவதிலிருந்து தடை செய்யலாம்.
கருவுற்ற முட்டை தன்னை கருப்பையுடன் பற்றிக்கொள்ளச் செய்த பிறகு மட்டுமே கர்ப்பம் தரித்த நிலை நிரூபிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது முக்கியமாகும்.
கர்ப்பம் தரிக்கப்பட்டுவிட்டால் ஐ-பில் ஆற்றலற்றதாகும்.
(உ.ம். கருவுற்ற முட்டை தன்னை கருப்பையுடன்
பற்றிக் கொண்டுவிடுதல்) எனவே இது ஒரு கருக்கலைப்பு மாத்திரை அல்ல.
|
| |
|
|
| |
| |
'கருக்கலைப்பு மாத்திரை'யிலிருந்து 'அவசர கருத்தடை மாத்திரை' எவ்வாறு வேறுபடுகிறது? |
| |
மருத்துவ ரீதியில் சொல்ல வேண்டும் என்றால் கருவுற்ற முட்டை கருப்பையின் உட்புறச் சுவரை பற்றிக்கொண்ட பிறகுதான் கர்ப்பம் ஆரம்பமாகிறது.
கருக்கலைப்பு மாத்திரைகளில் ஆன்ட்டிபுரோஜெஸ்டின்ஸ் எனப்படும் மருந்துகள் அடங்கியுள்ளன. இது கர்ப்பம் ஏற்பட்ட பின் கருவுற்றநிலை வளர்ச்சியை தடுக்கிறது.
ஆனால் ஐ-பில் போன்ற அவசர கருத்தடை மாத்திரைகளில், முதற் கட்டமாக கர்ப்பத்தை தவிர்க்கும் பொதுவான பெண் ஹார்மோன்கள் அடங்கியுள்ளன. எனவே கருக்கலைப்பு ஏற்படுவதில்லை.
அதிகம் அறிந்து கொள்ள, இங்கே கிளிக் செய்யவும் |
| |
|
|
| |
| |
நான் ஐ-பில் மாத்திரையிலிருந்து சிறந்த பலன்களை எவ்வாறு பெற முடியும்? |
| |
பாதுகாப்பற்ற செக்ஸ் கொண்ட அல்லது கருத்தடை பயனளிக்காத பிறகு கூடுமானவரை விரைவாக பயன்படுத்தும்போது ஐ-பில் சிறந்த முறையில் செயலாற்றுகிறது. ஆனால் 72 மணி நேரத்திற்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். |
| |
|
|
| |
| |
ஐ-பில் எவ்வளவு ஆற்றல் வாய்ந்தது? |
| |
எவ்வளவு சீக்கிரமாக உபயோகிக்கின்றீர்களோ அவ்வளவு ஆற்றல் மிக்கதாகும். இது பாதுகாப்பற்ற செக்ஸ் கொண்ட 24 மணி நேரத்திற்குள் 95 %, 25-48 மணி நேரத்திற்குள் 85% மற்றும் 49-72 மணி நேரத்திற்குள் எடுத்துக்கொண்டால் 58% ஆற்றலுடையதாகும். ஆனால் உங்களுடைய
மாதவிடாய் ஒரு வார காலத்திற்கு மேல் தாமதமாகும்பட்சத்தில், நீங்கள் ஒரு கருத்தரிப்பு சோதனையை செய்து கொள்ள வேண்டும் மற்றும் உங்கள் டாக்டரை தொடர்பு கொள்ளவும்.
|
| |
|
|
| |
| |
நான் ஐ-பில் எடுத்துக் கொள்ளுவதால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுமா? |
| |
ஐ-பில் மாத்திரைக்கு நீண்ட கால அல்லது தீவிர பக்க விளைவுகள் ஏதும் இல்லை, மற்றும் ஒவ்வொரு பெண்ணும் உபயோகிக்க இது பாதுகாப்பானது.
ஐ-பில் எடுத்துக்கொண்ட பிறகு ஏற்படும் சில பொதுவான பக்க விளைவுகளானவை-குமட்டல், வாந்தி மற்றும் தலைவலி. மேலும் அடி வயிற்று வலி உணரக்கூடும் அல்லது உங்கள் மார்பகம் வழக்கத்தைவிட மிக மிருதுவாக ஆகி இருப்பதை உணரக்கூடும். இவை அனைத்தும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் நின்று விடும். எதிர்பாராத விதமாக யோனி வழி இரத்தக் கசிவு ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன, ஆனால் இது
அபாயகரமானதல்ல. அடுத்த மாதவிடாய் நீங்கள் பெறுவதற்கு முன்பாக எல்லாம் சரியாக ஆகிவிடும். உங்களுடைய அடுத்த மாதவிடாய் முன்னதாக வரவோ அல்லது வழக்கத்தைவிட பிந்தி வரவோ கூட ஐ-பில் காரணமாகலாம். ஆனால் உங்களுடைய மாதவிடாய் ஒரு வார காலத்திற்கு மேல் தாமதமாகும் பட்சத்தில், நீங்கள் ஒரு கருத்தரிப்பு சோதனையை செய்து கொள்ள வேண்டும் மற்றும் உங்கள் டாக்டருடன் தொடர்பு கொள்ளவும். எதிர்கால (மற்றும் விரும்பும்) கருத்தரிப்புகளை சிக்கலாக்கலாம் எனும் நீடித்த விளைவுகள் எதுவும் ஐ-பில்க்கு கிடையாது. நீங்கள் லிவோநார் ஜெஸ்ட்ரெல்-க்கு ஒவ்வாமை உடையவராய் இருப்பின் ஐ-பில் பரிந்துரை செய்யப்படுவதில்லை. இது ஐ-பில்-ல் உள்ள மருந்தின் பெயராகும்.
|
| |
|
|
| |
| |
நான் ஐ-பில் உபயோகிக்கும் முன்பு அறிந்து கொள்ள வேண்டிய எச்சரிக்கைகள் ஏதேனும் உள்ளதா? |
| |
நீங்கள் ஐ-பில் எடுத்துக்கொள்ளும் முன்பு கீழ்க்கண்ட விவரங்களை அறிந்திருக்க வேண்டும்:
- பாதுகாப்பற்ற செக்ஸ் கொண்ட அல்லது கருத்தடை பயனளிக்காத பிறகு கூடுமானவரை விரைவாக பயன்படுத்தும் போது ஐ-பில் சிறந்த முறையில் செயலாற்றுகிறது. ஆனால் 72 மணி நேரத்திற்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- நீங்கள் ஏற்கனவே கர்ப்பம் தரித்திருப்பின் ஐ-பில் ஆற்றலற்றதாகும்.
- மேலும் வழக்கமான கருத்தடை முறையாக இதனை பயன்படுத்தக்கூடாது.
- ஐ-பில் ஹெச்ஐவி-எய்ட்ஸ் அல்லது இதர பாலுறவினால் பரவும் நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு வழங்குவதில்லை.
|
| |
|
|
| |
| |
ஐ-பில் செயல்புரிந்துள்ளது என்பதை நான் எவ்வாறு அறிந்து கொள்ளுவது? |
|
ஐ-பில் செயல் புரிந்ததா அல்லது இல்லையா என்று அறிந்துகொள்ள பருப்பொருளான சான்று அல்லது அறிகுறிகள் ஒன்றும் இல்லை. நீங்கள் ஐ-பில் எடுத்துக்கொண்ட பிறகு காத்திருக்க வேண்டும் மற்றும் உங்களுடைய அடுத்த மாதவிடாயை எதிர்பார்த்த நேரத்தின் ஒரு வார காலத்திற்குள் எதிர்பார்த்திருக்கவும். உங்களுடைய மாதவிடாய் காலம் ஒரு வாரத்திற்கு அப்பால் தாமதம் ஆகும் நிலையில் ஒரு கர்ப்பப் பரிசோதனை செய்து
கொள்ளுவதும் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிப்பதும் நல்லது.
|
| |
|
|
| |
|
| |
நான் ஐ-பில் மாத்திரையை வழக்கமான கருத்தடைக்காக பயன்படுத்தலாமா? |
| |
கூடாது. ஐ-பில் முறையான கருத்தடைக்காக பரிந்துரைக்கப்படுவது இல்லை. பாதுகாப்பற்ற செக்ஸ் கொண்ட பிறகு அல்லது கருத்தடை பயனிழந்த பிறகு கருத்தடைக்காக பக்கபல முறையாக பயன்படுத்தப்படும்போது ஆற்றல் வாய்ந்ததாகும். உங்கள் வழக்கமான கருத்தடைக்கு பதிலாக ஐ-பில் உபயோகிக்கக்கூடாது என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ளவும். |
| |
|
|
| |
|
| |
நான் ஐ-பில் மாத்திரையை எத்தனை முறை உபயோகிக்கலாம் அல்லது அடிக்கடி ஐ-பில் மாத்திரையை உபயோகிக்கலாமா? |
| |
ஐ-பில் ஒரு சுற்றில் ஒரு தடவைக்கு மேற்பட்டு உபயோகிக்கலாம், ஆனால் ஓர் அவசர கருத்தடையாக மட்டுமே உபயோகிக்க பரிந்துரை செய்யப்படுகிறது.
வழக்கமான கருத்தடைக்கு ஏன் ஐ-பில் காரண காரியத் தொடர்புடைய தேர்வு அல்ல என்பதற்கு பல காரணங்கள் உள்ளன:
- அடிக்கடி ஓர் அவசர கருத்தடையை உபயோகிப்பதைவிட வழக்கமான கருத்தடையின் எந்த முறையும் மிகவும் பயனுடையதாகும்;
- நீண்டகாலம் அதிகமாக பயன்படுத்தப்படுவதால் முறையற்ற மாதவிடாய் சுற்றுகளுக்கு காரணமாகலாம்.
இதனால் வெறுப்பூட்டும் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். உத்தேசித்திராத கருத்தரித்தலைத் தவிர்ப்பதற்காக வழக்கமான கருத்தடை முறைகளை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
|
| |
|
|
| |
|
| |
நான் ஏற்கனவே கர்ப்பமுற்றிருந்து ஐ-பில் உபயோகித்தால் என்னவாகும்? |
| |
நீங்கள் ஏற்கனவே கர்ப்பமுற்றிருந்தால் ஐ-பில் செயல் புரியாது.
நீங்கள் ஏற்கனவே கர்ப்பமுற்றிருக்கையில் நீங்கள் ஐ-பில் எடுத்துக்கொண்டால் உங்களுக்கோ அல்லது உங்கள் கருப்பையில் உள்ள சிசுவுக்கோ தீங்கு ஏற்படாது.
|
| |
|
|
| |
|
| |
என்னுடைய மாதவிடாய் காலம் ஒரு வாரத்திற்கு மேல் தாமதமாகிவிட்டால், தீவிர அடி வயிற்று வலி இருந்தால் நான் என்ன செய்யவேண்டும்? |
| |
இதற்கு உடனடி மருத்துவ கவனம் தேவைப்படுவதால் இத்தகைய சூழ்நிலைகளில் உடனே உங்கள் மருத்துவரை நீங்கள் கலந்தாலோசிப்பது இன்றியமையாததாகும். |
| |
|
|
| |
|
| |
அடுத்த மாதவிடாய் சுற்றுவரை ஐ-பில் ஓர் ஆற்றல் வாய்ந்த கருத்தடை முறையாக செயல் புரியுமா? |
| |
முற்றிலும் இல்லை. நீங்கள் ஐ-பில் எடுத்துக்கொண்ட பிறகு அடுத்த மாதவிடாய் காலம் வரை ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும்போது ஆணுறை, விந்து கொல்லி அல்லது சர்வைகல் கேப் போன்ற கருத்தடுப்பு முறை உபயோகிப்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளவும். |
| |
|
|
| |
|
| |
ஒரு குறுகிய காலத்தில் நான் பல தடவை செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது ஐ-பில் ஆற்றல் உடையதா? |
| |
ஆம், ஒரு குறுகிய காலத்தில் நீங்கள் பல தடவை செக்ஸ் வைத்துக்கொண்டாலும் ஐ-பில் சரிநிகர் ஆற்றலுடையது. ஆனால் ஐ-பில் எடுத்துக்கொள்ளும் முன் 72 மணி நேரத்திற்குள்ளாக எல்லா செயல்களும் நடந்திருக்கவேண்டும் என்பதில் அக்கறை எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் |
| |
|
|
| |
|
| |
அடுத்த சில நாட்களுக்குள் நான் மீண்டும் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் என தெரிய வந்தால் (உதாரணமாக நீடித்த வார இறுதி விடுமுறை), நான் காத்திருந்து மாத்திரையை பின்பு எடுத்துக்கொள்ளலாமா? அல்லது அந்த கால கட்டத்தில் ஒவ்வொரு தடவை நான் செக்ஸ் வைத்துக்கொண்ட பிறகும்
நான் மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டுமா?
|
| |
ஐ-பில் என்பது ஓர் அவசர கருத்தடை மாத்திரை. நீங்கள் செக்ஸ் வைத்துக்கொள்ள திட்டமிட்டு, கருத்தரிக்க வேண்டாம் என்று விரும்பினால் நீங்கள் வழக்கமான கருத்தடைகளை உபயோகிக்க வேண்டும் என்று அதிகமாக பரிந்துரை செய்யப்படுகிறது. தயவுசெய்து இது பற்றி உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும். |
| |
|
|
| |
|
| |
நான் ஓர் ஐ-பில் உபயோகித்த பிறகு எப்போது என்னுடைய மாதவிடாய் வரும்? |
| |
உங்களுடைய அடுத்த மாதவிடாய் நேரத்தே வரவேண்டும், ஆனால் சில நாட்கள் முன்னதாக அல்லது சில நாட்கள் தாமதமாகக் கூட வரலாம். இருப்பினும், மாதவிடாய் ஒரு வார காலத்திற்கு மேல் தாமதம் ஆனால், தயவுசெய்து ஒரு கர்ப்பப் பரிசோதனை செய்து கொள்ளவும் மற்றும் உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ளவும். |
| |
|
|
| |
|
| |
ஹெச்ஐவி-எய்ட்ஸ் போன்ற பாலுறவினால் பரவும் நோய்களுக்கு (STDs) எதிராக பாதுகாப்பு வழங்குவதில் ஐ-பில் உதவுகிறதா? |
| |
முற்றிலுமாக கிடையாது. ஹெச்ஐவி-எய்ட்ஸ் அல்லது இதர பாலுறவினால் பரவும் நோய்களிலிருந்து உங்களை ஐ-பில் பாதுகாக்காது. எஸ்டிடி களிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள ஆணுறைகளை பயன்படுத்துவது நன்று. |
| |
|
|
| |
|
| |
நான் தாய்ப்பால் ஊட்டும் நிலையில் நான் ஐ-பில் உபயோகிக்கலாமா? |
| |
தாய்ப்பாலூட்டும் போது ஐ-பில் பாதுகாப்பானது. ஐ-பில் உபயோகிப்பதால் உங்கள் குழந்தையை விபரீதமான பாதிப்புக்கு உள்ளாக்கும் விதமாக பால் தரத்தின் மீது எந்த விதமான குறிபிட்ட விளைவையும் ஏற்படுத்துவதில்லை. |
| |
|
|
| |
|
| |
அவசர கருத்தடை பயனிழந்துவிட்ட நிலையில் நான் என்னுடைய கர்ப்பத்தை தொடரலாமா? |
| |
நீங்கள் அவ்விதம் விரும்பும் பட்சம் உங்கள் கர்ப்பத்தை நீங்கள் தொடரலாம். ஐ-பில் மாத்திரையில் பயன்படுத்தப்பட்டுள்ள மருந்து உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைக்கோ எந்த தீங்கையும் ஏற்படுத்தாது. உங்கள் கர்ப்பத்தை தொடர நீங்கள் விரும்பவில்லை என்றால், தயவுசெய்து உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிக்கவும். |
| |
|
|
| |
|
| |
நான் நோயினால் துன்புற்று அதற்காக நீண்டகால மருந்து எடுத்துக் கொண்டிருக்கும் (ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, காச நோய், ஹெச்ஐவி-எய்ட்ஸ் முதலியன) நிலையில் ஐ-பில் எனக்கு பாதுகாப்பானதா? |
| |
இத்தகைய நிலைகளில் நீங்கள் ஐ-பில் எடுத்துக்கொள்ளும் முன்பு ஒரு மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. |
| |
|
|
| |
|
| |
நான் ஐ-பில் எடுத்துக்கொண்ட பிறகு வாந்தி எடுத்துவிட்டேன், அதை மீண்டும் நான் எடுத்துக்கொள்ளவேண்டுமா? |
| |
மாத்திரை எடுத்துக்கொண்ட மூன்று மணி நேரத்திற்குள் நீங்கள் வாந்திஎடுத்துவிட்டால், கூடிய விரைவில் ஆன்ட்டி எமிடிக்ஸ் (வாந்தி மற்றும் குமட்டலுக்கு எதிராக ஆற்றல் வாய்ந்த மருந்துகள்) உடன் நீங்கள் மற்றொரு மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும். காலி வயிற்றில் ஐ-பில்
எடுத்துக்கொள்ளுவதை நீங்கள் தவிர்த்தால் உங்களுக்கு வாந்தி எடுக்கும் வாய்ப்பு மிகவும் அரிது.
|
| |
|
|
| |
|
| |
மீண்டும் என்னுடைய வழக்கமான கருத்தடை மாத்திரைகளை நான் எப்போது எடுத்துக்கொள்ள ஆரம்பிக்க வேண்டும்? |
| |
நீங்கள் முன்னமேயே பயன்படுத்திய கருத்தடை முறையை ஆரம்பிப்பதாய் இருப்பின் அல்லது புதிய ஒன்றுக்கு மாறுவதாய் இருப்பின், நீங்கள் ஐ-பில் எடுத்துக்கொண்ட மறுநாளிலிருந்து ஆரம்பிக்கலாம். இருப்பினும் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்க மற்றும் உங்களுக்கு சிறந்த பொருத்தமான
ஒரு கருத்தடை முறையை ஆய்வு செய்ய இதுவே சரியான நேரமாக இருக்கலாம்.
|
| |
|
|
| |
|
| |
ஐ-பில் எங்கு கிடைக்கிறது? |
| |
உங்கள் அருகாமையில் உள்ள கெமிஸ்ட் கடையில் ஐ-பில் கிடைக்கிறது. ஐ-பில் வாங்குவதற்கு உங்களுக்கு டாக்டரின் ப்ரிஸ்கிரிப்ஷன் தேவை இல்லை.
|
| |
|
| |
|